வீட்டுல மாங்காய் இருக்கா? அப்ப தொப்பைக்கு குட்பை சொல்ல இதை பண்ணுங்க..!

115
Advertisement

மாம்பழம் வாங்க போய் மாங்காய் தான் கிடைத்தது என்றால் கவலை வேண்டாம்.

சொல்லப் போனால் மாம்பழத்தை விட கலோரிகள் மிக குறைவான மாங்காயில் ப்ரோடீன் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம்.

ஒரு மாங்காயை குக்கரில் பத்து முதல் 15 நிமிடங்கள் வரைக்கும் வேக வைத்து, தோல், கொட்டை நீக்கிய சதைப்பற்றுடன் புதினா மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும்.

பின்னர், இந்த கலவையில் தேவைக்கேற்ப வெல்லம், சிறிதளவு உப்பு, சுவைக்கேற்ப சற்று சீரகப்பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலக்கினால் வெறும் 55 கலோரிகள் வரும் இந்த மாங்காய் ஜூஸ் உடலின் செரிமானத் திறனை வெகுவாக அதிகரிப்பதோடு உடல் எடை குறைப்பில் பெரிதும் உதவுகிறது.

உடல் எடை குறைப்புக்கு பயன்படுவதோடு வெயில் காலத்தில் ஏற்படும் அதீத உடற்சோர்வு, தாகமான உணர்வு மற்றும் நீரிழப்பை சரிசெய்து உடலுக்கு புத்துணர்ச்சியும் ஆற்றலும் மாங்காய் ஜூஸ் அளிக்கிறது. வெல்லதிற்கு பதிலாக சக்கரை சேர்த்து பருகினால் சுவை சற்றே கூடுதலாக இருந்தாலும், இதே ஜூஸ் 100 கலோரிகளை தாண்டி உடல் எடை குறைப்பிற்கு வழி வகுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.