சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா.! – RCB யை பந்தாடிய KKR

3150
Advertisement

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர்களில் இலக்கை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய பெங்களூரு அணி, கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் பெங்களூரு அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களுக்கு சுருண்டது. கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, எளிய இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி, தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் கொல்கத்தா அணி 10 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இரவு நடைபெற உள்ள ஐ.பி.எல் லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.