இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு

236

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 40 காசுகள் குறைந்து 81 ரூபாய் 93  காசுகள் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை கண்டு வரும் நிலையில் இன்றும் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 40 காசுகள் குறைந்து 81 ரூபாய் 93  காசுகள் என சரிவந்தது. மேலும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 507 புள்ளிகள் சரிந்து 56 ஆயிரத்து 600 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 153 புள்ளிகள் குறைந்து 16 ஆயிரத்து 853 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.