இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

268
india corona
Advertisement

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பதிப்பில் இருந்து 24 ஆயிரத்து 770 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 687 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று மீட்பு விகிதம் 97.94 சதவிகிதமாக உள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 1.34 சதவிகிதமகாக உள்ளது.

கடந்த 37 நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 3 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது.

தொற்று பாதிப்பைக் கண்டறிய 57.68 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.