இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு

351

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தும் குறைந்தும் வருகிறது.

இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,124 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன் தினம் 2,022 நேற்று 1,675 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2,124 ஆக சற்று உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,31,40,068 லிருந்து 4,31,42,192 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 1,977 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,00,737 லிருந்து 4,26,02,714 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை 5,24,507 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,841 லிருந்து 14,971 ஆனது.

இந்தியாவில் ஒரேநாளில் 13,27,544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரை 192.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.