இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது?

340

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 83 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 2 ஆயிரத்து 236 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 17 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 6 பேர் பலியானதால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 636 உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு தற்போது 18 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.