அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அண்ணாமலை சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட உள்ள நிலையில் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அண்ணாமலை திடீரென செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பாசத்தை வெளிப்படுத்திய சம்பவம் நடந்தது.தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி .
இவரது சகோதரர் அசோக், உறவினர்கள் நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.இதையடுத்து நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் சோதனை நடந்தது. மேலும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகத்தில் 17 மணிநேரம் சோதனை நடந்து முடிந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது நெஞ்சுவலி எனக்கூறி அவர் துடித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்கிடையே தான் சென்னையில் இன்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்
. பொதுவாக செந்தில் பாலாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அண்ணாமலை இன்றும் அவரை விமர்சனம் செய்தார். அதேவேளையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகவும் அண்ணாமலை பேசினார். இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது: