கர்நாடக சட்டமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்…

97
Advertisement

கர்நாடக மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 2 ஆயிரத்து 427 ஆண் வேட்பாளர்கள், 184 பெண் வேட்பாளர்கள், 2 திருநங்கைள் என மொத்தம் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராஜாஜி நகர், ஒசகோட்டை,  பெல்லாரி நகரம், ரெய்ச்சூர் உள்ளிட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 15க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.