தெலங்கானாவில் காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்…

167
Advertisement

தெலங்கானா மாநிலம் ஆர்.எஸ் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.

இவர் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அப்பெண் சுரேஷின் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை அந்த பெண் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அப்பெண்ணை இடைமறித்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். அப்பெண் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த நிலையில், அப்பகுதிமக்கள் சுரேஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கழுத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியொ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.