இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம்!

237
Advertisement

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, பெங்களூருவில் பகலிரவு ஆட்டமாக நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

Advertisement

கேப்டன் ரோஹித், மயங்க் அகர்வால் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஹனுமா விகாரி மற்றும் விராட் கோலி சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர்.

ரிஷப் பண்ட் தன் பங்குக்கு 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களில் ஆட்டமிழந்து, சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சாமளிக்க முடியாமல் தடுமாறியது.

பும்ரா, ஷமி இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.

பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.