தலைவலியை விரட்டும் ஹெர்பல் Tea

109
Advertisement

பருவநிலை மாறும் போது காற்றில் இயல்பை விட ஈரப்பதம் அதிகரித்து காணப்படும்.

இதனால், பலருக்கும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை சரிசெய்ய தனியாக மாத்திரை மருந்து எடுத்து கொள்வதை விட மருத்துவ பயன்கள் நிறைந்த மூலிகை டீ பருகி வந்தாலே சிறப்பான பலன்கள் கிடைக்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வானிலை மாற்றத்தினாலோ அல்லது அஜீரண கோளாறினாலோ வரும் தலைவலிக்கு இஞ்சி டீ உடனடி தீர்வாக அமைகிறது. மைக்ரைன் தலைவலியை குறைக்க துளசி டீ பயன்படும் நிலையில் வாயு, கவலை மற்றும் உடற்சோர்வு காரணமாக உருவாகும் தலைவலிக்கு புதினா டீ தகுந்த மருந்தாக செயல்படுகிறது.

Advertisement

உடல் எடை குறைப்புக்காக பிரபலமாக அறியப்படும் Green Tea, உடலில் உள்ள நச்சு தன்மையை வெளியேற்றி, தசைகளை வலுவாக்குவதோடு உடல்வலி மற்றும் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

மைக்ரைன் தலைவலிக்கு எதிராக செயல்படுவதோடு, லாவெண்டர் டீ (Lavender Tea) சீரான தூக்கத்தை உறுதி செய்து உடலையும் மனதையும் அமைதிப்படுத்துகிறது.

ஆண்டி ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்துள்ள சாமோமைல் டீ, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க உதவுவதால், டீ வகைகளிலேயே இது சிறந்த தேர்வாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.