இத்தாலியில் ஏழைகளின் உணவாக விளங்கும் பீட்சா இன்று உலகம் முழுவதும் பணக்காரர்களின் உணவாக உயர்ந்துவிட்டது.
தற்போது பீட்சா சாப்பிட்டாலே ஒரு தனி கௌரவம்தான் எனக் கர்வம் கொள்வோர் அதிகம்.
இராணுவ வீரர்கள்மூலம் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பீட்சா உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டது. இன்று அந்தஸ்துப் பொருளாக மாறிவிட்ட பீட்சா இந்திய நகரங்களில் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனாலும், அது வசதி படைத்தோருக்கான உணவாகவே உள்ளது.
இந்நிலையில் மண்குடுவையில் வைத்துத் தரப்படும் குல்ஹாத் வாலா பீட்சா சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள தி கோன் சாட் என்னும் உணவத்தில்தான் இந்தப் புதுவித பீட்சா விற்கப்படுகிறது. இங்குள்ள அனைத்து உணவுகளுக்கும் போட்டியாக குல்ஹாத் வாலா பீட்சா பரபரப்பாகி வருகிறது.
இந்தப் பீட்சாவைத் தயாரிப்பது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
பீட்சா ரொட்டியுடன் சோளம், தக்காளி, பன்னீர் கலந்து மூன்றுவித சாஸ் சேர்க்கப்பட்டு மசாலா கலந்து தயாரிக்கப்படும் இந்தப் பீட்சா மண்குடுவையில் வைத்துப் பரிமாறப்படுகிறது. இந்த உணவகத்தில் 16 விதமான பீட்சாக்கள் தயாரிக்கப்படுகின்றன.
பீட்சா என்றாலே ஓடி ஒளிந்தவர்கள்கூட இந்த குல்ஹாத் வாலா பீட்சாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டார்களாம்….