“ஏழைகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது”

342

குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் ‘குஜராத் கவுரவ் அபியான்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அதை தொடர்ந்து விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சியே குஜராத்தின் பெருமை என்று கூறியுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளில், நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான முழுமையான அணுகுமுறையை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், சிறந்த ஊட்டச்சத்து, சுத்தமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியுள்ளோம்” என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.