சட்டப்படி வீட்டில எவ்ளோ தங்கம் இருக்கலாம்?

226
Advertisement

தங்கத்தில் ஆபரணங்கள் செய்து அணியும் வழக்கம் உலக முழுவதும் இருந்தாலும், பல நாடுகளில் தங்கம் பிரதான முதலீட்டு பொருளாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் தங்கம் முதலீடாகவும், தனிப்பட்ட நபர்களின் அந்தஸ்து குறியீடாகவும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகவும் விளங்குகிறது.

பெரும்பாலானோர் சேமிக்கும் தங்கத்தை வீட்டிலேயே வைப்பதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், சட்டப்படி எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம் என்பதை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் விதிகளின்படி திருமணமான பெண் 500 கிராமும், திருமணமாகாத பெண் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம். மேலும், ஒரு ஆண் 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம்.

அதை தவிர, 2016ஆம் ஆண்டு சட்டதிருத்தத்தின் படி அதிக அளவு தங்கம் வீட்டில் இருந்தாலும் வீட்டில் உள்ள நபர்களின் வருமானம் அதற்கு ஏற்ற விதமாக இருந்தாலோ, நகை வாங்கியதற்கான ரசீது உள்ள தகுந்த ஆவணங்கள் இருந்தாலோ வருவாய்த் துறையின் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அப்படியே, சோதனை நடந்தாலும் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப வீட்டாரின் வருமானம் உள்ளது என்பதை நியாயப்படுத்தி நிரூபித்தால் போதுமானது.