“உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலை”

572

உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைக் அதானி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் 3.9 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான கௌதம் அதானியின் அதானி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம், பிரான்சின் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை உருவாக்குகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்திற்காக அடுத்த பத்தாண்டுக்குள் 3.9 லட்சம் கோடியை அதானிஇண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.