குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவும், அந்த பொருட்களால் உடலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததாலும், புகையிலை பொருட்களுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தடை விதித்து வருகிறது.
இந்த தடை கடந்த மே 23-ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்நிலையில் இந்த தடையை மேலும் ஒராண்டுக்கு நீடித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களை தயாரிக்கவும், விநியோகிக்கவும், பாதுகாக்கவும் மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு தடை விதித்துள்ளது.