சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு

235

சென்னையிலிருந்து சொகுசுக் கப்பல் சேவையை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த கப்பல் பல்வேறு கட்டமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு, கப்பலில் பயணம் செய்வதற்கான கட்டணம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையிலிருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட “எம்ப்ரெஸ்” சொகுசு கப்பல் புதுச்சேரிக்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் திருப்பி அனுப்பப்பட்டது.

புதுச்சேரி கடற்பகுதியில் நிறுத்துவதற்கு அனுமதி பெற்ற பிறகு வரும்படி புதுச்சேரி கப்பற்படை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சொகுசு கப்பல் புதுச்சேரி வருவதற்கு அனுமதி இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்த நிலையில், சொகுசு கப்பல் புதுவை சென்றதால் அது துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.