தொடர்ச்சியாக நகை பிரியர்களுக்கு ஷாக் தரும் தங்க விலை

383
Advertisement

தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆனால் தற்போது சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் தங்க நகை வாங்குவோர் பெரும் சிரமத்தில் உள்ளனர். தங்கம் விலை கடந்த 26ம் தேதி சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் 38,752க்கு விற்கப்பட்டது. இந்த வார திங்கட்கிழமை சவரனுக்கு 224 குறைந்து ஒரு சவரன் 38,608க்கு விற்கப்பட்டது. செவ்வாயன்று ரூ.38,344க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 448 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து சவரன் விற்கப்பட்டது. ஆனால் நேற்று திடீரென தங்கம் விலை சற்று உயர்ந்தது. நேற்று சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.38,344க்கு விற்பனையானது. இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,834க்கும், சவரன் ரூ.38,672க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70க்கு விற்கப்படுகிறது.