தெருவுக்கு கோட்சே பெயரில் வைக்கப்பட்ட பலகை

188

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்ட சாலைக்கு, காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் பெயரை கொண்ட பலகை வைக்கப்பட்டது கடும் சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உள்ளூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோட்சேவின் பெயரைக் கொண்ட சாலைப் பலகை அகற்றப்பட்டு, சர்சைக்குரிய சாலைப் பலகையை வைத்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த பெயர் பலகை அரசாலோ அல்லது ஊராட்சி அதிகாரிகளாலோ நிறுவப்படவில்லை என்று கர்நாடக எரிசக்தி அமைச்சர் சுனில் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

விஷமிகள் சிலர் இந்த செயலை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.