G-Pay யில் தவறுதலாக அனுப்பிய பணம் ஒப்படைப்பு

258
Advertisement

வேலூரில் உணவக உரிமையாளருக்கு Google pay-யில் தவறுதலாக அனுப்பப்பட்ட 75 ஆயிரம் ரூபாய், உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய், சிங்கராசு.

அவர்கள் 2 பேரும் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே நபீல் என்பவரின் உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளனர்.

உணவிற்கான பணத்தை Google pay-யில் அனுப்பி உள்ளனர். வீடு திரும்பிய சிங்கராசு, அவரது உறவினருக்கு Google pay-யில் 75 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் அனுப்பி உள்ளார்.

இதனிடைய உறவினரின் வங்கி கணக்கில் பணம் வராததால், அதிர்ச்சியடைந்த அவர், Google pay-யை ஆராய்ந்த போது, 75 ஆயிரம் ரூபாய் பணம் தவறுதலாக உணவக உரிமையாளருக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் முன்னிலையில் 75 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்த உணவக உரிமையாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.