Saturday, December 14, 2024

இனிமேல் காஃபிக் கழிவுகளைக் கொட்டாதீங்க…..ஷு தயாரிக்கலாம்

காஃபிக் கழிவுகளிலிருந்து ஷு தயாரிக்கப்பட்டுள்ள புதுமையான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஷு தயாரிப்பு நிறுவனம் ஒன்று காஃபிக் கழிவுகளிலிருந்து ஷு தயாரித்து அசத்தியுள்ளது.

ஒரு ஜோடி ஷுவின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக 8 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஷு நீடித்து உழைப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு ஜோடி ஷுவில் 300 கிராம் காஃபிக் கழிவுகள் உள்ளன. உலகளவில் வியட்நாமில் காபி உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. அதேசமயம், காஃபி உற்பத்தியின்போது ஏற்படும் கழிவுகளை மறுசுழற்சிசெய்ய முடியாமல், ஒவ்வோராண்டும் 6 மில்லியன் டன் வீணாகக் கொட்டப்படுகின்றன. இது அங்கு சுற்றுச்சூழலைப் பாதிப்பதாக அந்நாடு கருதுகிறது.

காஃபிக் கழிவுகள் மட்கக்கூடிய கழிவுதான் என்றபோதிலும், அது மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்கிறது. இது கார்பன் டை ஆக்சைடைவிட 32 மடங்கு அதிக வலுவுடையதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரபல ஷு தயாரிப்பு நிறுவனமான ரென்ஸ் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டும்விதமாக காஃபி கழிவுகளிலிருந்து ஷுக்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

காஃபிக் கழிவுகளைப் பதப்படுத்தி அதனுடன் இயற்கை ரப்பர் மற்றும் சிலவகைப் பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாக ஷு தயாரித்துவிட்டது.

அதிசயங்களால் நிறைந்துகிடக்கிறது இணையம். நெட்டிசன்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்…

https://fb.watch/bX-JlrZ_pr/

Latest news
Related news