Friday, February 14, 2025

அறக்கட்டளை சொத்துக்கள் முடக்கம்..வைரலான கிருத்திகா ட்வீட்! உதயநிதி கொடுத்த

முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் மற்றும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான வங்கிக்கணக்கில் இருந்து 34.7 லட்சத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அண்மையில் லைகா productions, கல்லல் foundations மற்றும் பல நிறுவனங்களிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

லைகா productionsக்கும் கல்லல் foundationsக்கும் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதற்கிடையே, கல்லல் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக லைகா நிறுவனம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து கல்லல் நிறுவனத்துக்கும் உதயநிதிக்கு சொந்தமான அறக்கட்டளைக்கும் தொடர்பு இருக்கவே, அடுத்த கட்ட நடவடிக்கையாக 34.7 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளை கிருத்திகா உதயநிதியின் பெயரில் இருப்பதாக செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், போலி செய்திகளை பகிர்பவர்கள் குறைந்தபட்சம் என்னுடைய நல்ல photo வை பயன்படுத்துங்கள் என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டை quote செய்து உதயநிதி ஸ்மைலி எமோஜி பதிவிட்டுள்ளார். இந்த உரையாடல் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Latest news