உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon D’OR விருதை பிரான்சை சேர்ந்த கரீம் பெஞ்சிமா பெஞ்சிமா தட்டி சென்றார்.
பிரான்ஸ் கால்பந்து இதழியல் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் Ballon D’OR என்ற விருதை முதன்முறையாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கரீம் பெஞ்சிமா பெஞ்சிமா தட்டி சென்றார்.
இவ்விருதை 7 முறை வாங்கிய மெஸ்ஸியும், 5 முறை வாங்கிய ரொனால்டோவும் இம்முறை டாப் 3 பட்டியலில் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.