அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்

258

அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

ஐ.நா. சபையின் 77-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். வாஷிங்டனில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோவை, மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  சந்தித்து பேசினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வர்த்தகச் செயலாளருடன் ஒரு சிறப்பான சந்திப்பு நடைபெற்றது என்றும், இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு, உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வணிக ஊக்குவிப்பு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.