பரபரப்பான OPS அணி மாநாடு! ஒரே இடத்தில் 30 ஆயிரம் பேர் திருச்சியில் குவியும் தொண்டர்கள்..! 

55
Advertisement

ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத்தேர்தல், அதனை தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தலிலும் பெரியளவுக்கு தமிழகம் முழுவதும் சென்று அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை, சொந்த மாவட்டத்திற்குள்ளேயே முடங்கினார் என்றும், அவரது ஆதரவாளர்களே கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைப்பார்க்க தூண்டிவிட்டதாக கே.பழனிசாமி தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இரு தரப்பினரின் இந்த மோதலால் ஆட்சி பறிபோனதும் இரு பிரிவாக பிரிந்து செயல்பட்டனர். இரு தரப்பினரும் மாறிமாறி ஒருவரை ஒருவர் நீக்கினர். உள்கட்சி விவகாரம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரைபோய், தற்போது கே.பழனிசாமியை நீதிமன்றமும், தேர்தல் ஆணையும் அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்தது.

அதை ஏற்க மறுக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், பொதுக்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளுமே மட்டுமே கூடி அதிமுகவின் தலைமையை முடிவு செய்ய முடியாது, தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும் எனக்கூறி மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.