இங்கிலாந்தில் அதிக வெப்பத்தால் பாறைகள் உடையும் அபாயம்

282
Advertisement

கடந்த சில மாதங்களாகவே, அதிகரித்து வரும் வெப்பத்தால் இங்கிலாந்து மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், சிட்மௌத்தில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை உடைந்த பாறை கற்கள் வந்து விழுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயர்ந்து வரும் வெப்ப அளவின் காரணமாக ஏற்கனவே வெடிப்புகள் இருக்கும் பாறைகள் எளிதில் உடைந்து விழுவதாக ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ள நிலையில், சிட்மௌத் கிழக்கு கடற்கரை பக்கம் மக்கள் செல்ல வேண்டாம் என அப்பகுதி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.