பொறியியல் படிப்பு முதல் 18,763 பேர் விண்ணப்பம்

406

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளில் 18 ஆயிரத்து 763 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது.

மாணவர்கள் www. tneaonline.org என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொறியியல் கலந்தாய்விற்கான விண்ணப்பபதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 18 ஆயிரத்து 763 பேர் விண்ணப்பத்துள்ளனர்.

இதில் 4 ஆயிரத்து 199 பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும், 790 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளதாகவும், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.