ட்விட்டரில் புளூ டிக்கிற்கு மாதம் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய மதிப்பில் மாதம் 660 ரூபாய் வசூலிக்கப்படும் என ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை பணி நீக்கம் செய்தார். இதையடுத்து ட்விட்டரில் முக்கிய பிரமுர்களை குறிப்பிடுவதற்கான, புளூ டிக்கிற்கு ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. தற்போது ட்விட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 4.99 டாலர்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த சேவையில் இருந்து அதிக வருவாய் ஈட்டும் வகையில், வெரிபிகேஷன் சேவையையும் இதில் கொண்டுவர ட்விட்டர் முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், ட்விட்டரில் புளூ டிக்கிற்கு மாதம் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மேலும் கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ட்விட்டரில் புளூ டிக்கிற்கு, இந்திய மதிப்பில் மாதம் 660 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.