எச்சரித்த எலான் மஸ்க்

234

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை 3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் நிறைவடையாமல் நிலுவையில் உள்ளது.

டிவிட்டரில் அதிகமான போலி கணக்குகள் உள்ளதாக குறிப்பிட்டிருந்த எலான் மஸ்க், 5 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே போலி கணக்குகள் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் எழுதியுள்ள கடிதத்தால், டிவிட்டர் பயனாளர்கள் குறித்த விவரங்கள், டிவிட்டரில் போலியாக உள்ள கணக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட தரவுகளை வழங்காவிட்டால், டிவிட்டரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால், டிவிட்டரை வாங்கும் எலான் மஸ்கின் முடிவு கேள்விக்குறியாகி உள்ளது.