53
Advertisement

மண்புழு தவிர்த்து ஒருவகை உருளைப்புழுவும்((Steinernema adamsi)உழவர்களின் நண்பனே

University of California-Riverside ஆய்வாளர்கள் உழவர்களுக்கு பேருதவியாக இருக்கும் புதுவகை உருளைப்புழு(Nematodes)ஒன்றை(Steinernema adamsi)கண்டுபிடித்துள்ளனர்.

அவை இயற்கை பூச்சிக்கொல்லிகளாக செயல்படுவதால்,தேவையற்று செயற்கை வேதிபூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை தவிர்த்து மண் வளம்,இயற்கை சூழல் கெடாமல்(இதனால் மக்கள் நோய்வாய்படாமல்)நீடித்த வேளாண்மை(Sustainable Agriculture) செழித்து வளர உதவிபுரிகின்றன.

1920 களில் இருந்தே விவசாயிகள் உருளைப்புழுக்களை இயற்கை பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தி வந்தாலும்,சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒருவகை உருளைப்புழு(Steinernema adamsi- அமெரிக்க உயிரியல்துறை நிபுணரான Bryon Adams நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.)தாய்லாந்தை பிறப்பிடமாகக் கொண்டாலும்,அவை மற்ற உருளைபுழுக்களைப் போல் அல்லாமல் ஈரப்பதம்,வெப்பம் மிகுந்த பகுதிகளில்(Warm and Humid climate)எளிதில் வளரும் தன்மை கொண்டுள்ளது. இதை சிறப்பம்சமாக பார்க்க வேண்டும்.

மற்ற உருளைப்புழுக்கள் மேற்சொன்ன சூழலில்(Hot &Humid) எளிதாக வளர்வதில்லை.

1 மி.மீட்டர் நீளமும்,மனிதர்களின் ஒரு மயிரில் பாதி அளவு அகலமும் உள்ள இந்த Steinernema adamsi உருளைப்புழு தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளின் வாய் மற்றும் மலவாய் வழியாக உள்நுழைந்து,தனது மலத்தில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகளை வெளியேற்றி பூச்சிகளுக்குள் செலுத்துவதால், பூச்சிகள் 48 மணி நேரத்திலேயே இறக்கின்றன.(2 நாட்கள்)

இயற்கை பூச்சிக்கொல்லியாக உருளைப்புழு(Steinernema adamsi)செயல்படுவதால் செயற்கை பூச்சிக்கொல்லிகளின் தேவை தவிர்க்கப்பட்டு நீடித்த வேளாண்மையை,இவை உறுதிசெய்வதால், இவற்றை உழவர்களுக்கு உதவும் சிறுகதாநாயகர்கள் என அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை. 

ஒருவகை பூச்சிகளை(Wax Moth)உருளைப்புழுக்கள் கட்டுப்படுத்துவது ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

அதே போன்று மற்ற பூச்சிகளையும் இவை  அழிக்கம் திறன் கொண்டவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்பதால்,தமிழகம்/இந்தியாவிலும் இதை பயன்படுத்த நாம் முன்வர வேண்டும்.

தமிழக/ இந்திய அரசுகள் செவிசாய்க்குமா?

உருளைப்புழுவையும் விவசாய நண்பனாகக் கருதி அதை பயன்படுத்த முன்வருமா?

மரு.வீ.புகழேந்தி.