தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அப்போது அங்கு புதிதாக கட்டுப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் அவர் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் என்று திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தொடர்ந்து, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களையும், ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களையும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களையும் சந்திக்கவிருக்கிறேன். தமிழ்நாட்டில் கழக அரசு அறிவித்துள்ள திட்ங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை – வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட நம்முடைய மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது.
அதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு இருக்கிறது. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, டெல்லிப் பட்டணத்தில் திராவிடக் கோட்டையாக உருவாகியுள்ள கழக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் ஏப்ரல் 2-ஆம் நாள் திறக்கப்படுகிறது.