குற்றம் செய்தவர்கள் காவல்துறைக்கு பயந்து பா.ஜ.க-வில் இணைவதாக தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு, குற்றவாளிகளின் புகழிடமாக பா.ஜ.க விளங்குவதாக விமர்சித்துள்ளார்…

113
Advertisement

தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரீகம் தெரியாது என்றும்,

அரசியல் பேச அவருக்கு தகுதி இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். தி.மு.க-வில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தி.மு.க தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். குற்றவாளிகளின் புகழிடமாக பா.ஜ.க விளங்குவதாகவும் டி.ஆர்.பாலு விமர்சித்தார்