காலையில் காஃபி குடித்தவுடன் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறதா? மருத்துவர்கள் தரும் முக்கிய விளக்கம்!

72
Advertisement

உலகெங்கிலும்  உள்ள  மக்கள்  தங்களது  காலைப்  பொழுதைக்  காபி  அல்லது தேநீருடன்  தான்  தொடங்குவார்கள்,  இல்லையென்றால்  நாள்  முழுவதும் உற்சாகம்  இல்லாதது  போன்ற  மனநிலை  தான்  அவர்களுக்கு  இருக்கும்.

ஆனால் காபி குடிப்பதற்கும், உடலில் குடல் சீராக இயங்குவதற்கும் சில தொடர்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள், காபியில் உள்ள காஸ்ட்ரின் என்ற பொருள் ஹார்மோனின் அளவை அதிகரிக்கும் அமிலங்களைக் கொண்டுள்ளது. இது உங்களது வயிற்றில் உள்ள தசை சுருக்கங்களைத் தூண்டி உங்களது குடல் இயக்கங்களைச் சீராக்குகிறது, இதனால் தான் காபி அருந்திய 4 நிமிடங்களுக்குள் பெரும்பாலான மக்களுக்கு மலம் கழிக்கும் உணர்வு வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனவே இது தொடர்பாக ஆய்வில் பங்கேற்ற நபர்களில் சிலர் காஃபியை குடித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, கழிவறைக்கு சென்றுள்ளார்கள், காபி நமக்கு ஆற்றலை வழங்குவதை விட, இதில் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காபியில் உள்ள காஃபினேட்டட் ஜால்ட் நிச்சயமாக உங்களைக் காலையில் உற்சாகமடையச் செய்யும் மேலும் உடலின் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோனான கோலிசிஸ்டோகினின் வெளியீட்டைக் காபி அதிகரிக்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன.

மேலும் பெருங்குடலை சுறுசுறுப்பாக மாற்றி செரிமான பிரச்சனை இல்லாத சூழலை உருவாக்குகிறது. எனவே குடலில் பல விதமான இயக்கங்களைக் காப்பி செய்வதால் தான் மலம் கழிக்கும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது என்று  மருத்துவர்கள் கூறுகிறார்கள்