நமக்கெல்லாம் சோறு தாங்க முக்கியம்!சாப்பாடு என்றால் யாருக்குதாங்க பிடிக்காது?அனைவரும் உழைத்து அலுத்துப்போவது அந்த ஒருஜான் வயிற்றிற்காக தானே.ஆனால் இதில் கவனிக்கத்தகுந்த விஷயம் என்னவென்றால் நாம் எந்த உணவை எப்படி எதனுடன் சேர்ந்து வைத்து சாப்பிடுகிறோம் என்பது தான் குறிப்பிடா சில உணவுகளை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என சொல்லப்படுகிறது அவை எந்தெந்த உணவு என்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
மீன் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒன்றாகும். ஆனால் நாம் மீன் சாப்பிடும்பொழுது கூடவே தயிர் மற்றும் பால் போன்றவற்றை சேர்த்து சாப்பிட கூடாது. இப்படி சாப்பிடுவதால் வெண்மேகம்(Vitiligo) போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என சொல்லப்படுகிறது.
பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது தேன். நம்முடைய உடலில் ஏதேனும் தீக்காயம் ஏற்பட்டால் அதனை சரி செய்யும் இயற்கை மருத்துவ பொருளாக இந்த தேன் இருக்கிறது.அது போல நெய் தினமும் சிறிதளவாவது நம்முடைய உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஆனால் மிக முக்கியமாக இந்த தேனையும் நெய்யையும் சம அளவில் கலந்து சாப்பிட கூடாது. மீறினால் நஞ்சாக மாற அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
மலச்சிக்கலுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது.அதுபோல தயிர் நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்க கூடியது. ஆனால் இந்த வாழைப்பழத்தை தயிருடன் சேர்த்தோ அல்லது வாழைப்பழம் உண்டவுடன் தயிரோ சாப்பிட கூடாது. இது விஷமாக மாறி விடும் என சொல்லப்படுகிறது.