அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக அவரது மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது நேற்று கைது படலத்தில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
நேற்று முதல்நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது.
மொத்தமாக 17 மணி நேரம் சோதனை நடந்தது. வீட்டோடு சேர்த்து தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.