மே 28ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

225

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில், வரும் 28ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில்  திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக  அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.