Monday, March 17, 2025

மதிய உணவை மொத்தமாக தவிர்க்கும் மன்னர் சார்லஸ்! இது தான் காரணமா?

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தனது தனித்துவமான குணாதிசயங்களுக்காகவும் விநோதமான பழக்க வழக்கங்களுக்காகவும் பிரபலமாக அறியப்படுபவர்.

இந்நிலையில், மன்னர் சார்லஸ் மதிய உணவு சாப்பிடுவதை அறவே தவிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை மன்னர் சார்லஸின் முன்னாள் தகவல் தொடர்பு செயலாளர் ஜுலியன் பெயின் பகிர்ந்துள்ளார்.

காலை உணவுக்காக மன்னர் சார்லஸ் ஆளி விதைகளை முக்கிய உணவாக எடுத்துக் கொள்வதாக, பிரபல எழுத்தாளர் டீனா பிரவுன் (Tina Brown) தனது ‘The Palace Papers’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரட், பழச்சாறுகள் மற்றும் பருவ கால பழங்கள் ஆகியவற்றை மன்னர் சார்லஸ் காலை உணவாக எடுத்துக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாவுகளை கொண்டு தயாரிக்கப்படும் பிரட் மற்றும் ஒமேகா கொழுப்பு சத்துக்களை கொண்ட ஆளி விதைகளை சாப்பிடுவது மன்னர் சார்லஸின் ஆரோக்கியத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும், மன்னர் சார்லஸ் எப்போதுமே மதிய உணவை தவிர்ப்பவர் என்பதால் அவருடன் வெளியே செல்லும் போது காலை உணவை அதிகமாக சாப்பிட்டு விட்டு, பசி வரும் போது சாப்பிட snacks barகளை கைவசம் வைத்திருக்க வேண்டும் என கற்றுக்கொண்டதாக ஜுலியன் பெயின் தெரிவித்துள்ளார்.

Latest news