மீண்டும் வலுக்கும் தனுஷ் ஐஸ்வர்யா மோதல்! மகன்களின் நிகழ்ச்சிக்கு வராத தனுஷ்

365
Advertisement

ஐஸ்வர்யா, தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் குடும்பத்தை சுற்றும் குழப்பங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டு வருகிறது.

அண்மையில், போயஸ் கார்டனில் புது வீடு கட்டிய தனுஷின் புகுமனை புகுவிழாவில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, தனுஷின் மகன்கள் என யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், தனுஷ் ஐஸ்வர்யாவின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவின் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளது.

வழக்கமாக, தனுஷும் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா மட்டுமே சென்றுள்ளார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தன் மகன்கள் விளையாடி வெற்றி பெற்றனர் என்பதை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த போஸ்டுக்கு பல லைக்குகள் குவிந்து வரும் நிலையில், தனுஷ் ஏன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வியும் நிலவி வருகிறது.