ஏனாமில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

182

ஏனாமில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோதாவரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஏனாம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன் ஆகியோர் நேற்று ஏனாம் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். பின்னர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். முன்னதாக மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ஏனாமில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரசு சார்பில், 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.