“மனசு சரி இல்ல” BMW காரை ஆத்தில் மூழ்கடித்த நபர்

66
Advertisement

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காவிரி ஆற்றின் நடுவே மூழ்கியபடி  பளிச்சென்ற சிவப்பு நிற 1.3 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ காரை பார்த்த கிராம மக்கள், மீனவர்கள், அந்த வழியாக சென்றவர்கள் பீதியடைந்தனர்.

விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை,ஆற்றில் மூழ்கிய நிலையில் இருந்த  காரின் உள்ளே யாரும் சிக்கி உள்ளார்களா என சோதனை செய்ததில், யாரும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.

Advertisement

அதையடுத்து , கார் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் போக்குவரத்துத் துறை உதவியுடன், கார் பெங்களூருவில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தினர்.உரிமையாளரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த பிறகு, அந்த நபரை ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

அதனால் அவரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தியதில், அவர் தன் தாய் மரணத்திற்கு பின் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,இதனால் தான்   காரை ஆத்தில் மூழ்கடித்து வீட்டிற்கு திரும்பியதாக தெரியவந்துள்ளது.