தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்

166

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக 50 லட்சம் ரூபாய் பணம் முறைகேடாக பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இதே வழக்கில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்திருந்தது.

அதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி கொடுத்தற்கு எந்த ஆதராமும் இல்லை என்று வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், இவ்விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்கினால் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காமல் போக வாய்ப்புள்ளது என்றும் சாட்சியங்களையும் கலைத்து விட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துக் கொண்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.