டெல்லி விமானவிபத்து- 185 உயிரிகளை காப்பாற்றிய “பெண் விமானி”

293
Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்டனாவில் இருந்து  185 பயணிகளுடன் டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், வானில் பறந்த சில நிமிடங்களில் இன்ஜினில் தீ பற்றியது.

விமானத்தில் தீ பற்றியதை கவனித்த உள்ளூர் மக்கள் , தாமதிக்காமல் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.அதையடுத்து அதிகாரிகள் விமானநிலையத்தை தொடர்புகொண்டு விமானியை  எச்சரிக்கை செய்ததையடுத்து விமானம் அவசரமாக மீண்டும் பாட்டனா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

திடிர்யென ஏற்பட்ட இந்த  ஆபத்தான சூழலை துரிதமாய் செயல்பட்டு 185  பேருடன்  விமானத்தை  பத்திரமாக தரையிறக்கியது ஒரு “பெண் விமானி” என்பது எதைப்பேருக்கு தெரியும் ?

ஆம் , அன்று அந்த விமானத்தின் பைலட் இன் கமாண்டாக இருந்தது  (PIC), “கேப்டன் மோனிகா கண்ணா” , தகவலறிந்த நிமிடத்தில்  பாதிக்கப்பட்ட என்ஜினை அணைத்துவிட்டு, இந்த அவசர தரையிறக்கத்தில் விமானத்தில் இருந்த அனைவரையும் காயமின்றி பாதுகாப்பாக பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

ஓடுபாதையின் ஒரு முனையில் உயரமான மரங்களையும் மறுமுனையில் ரயில் பாதையையும் கொண்ட இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்று பாட்னா விமான நிலையம்.மோனிகா கன்னா ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் நிறுவனத்தில் உயர் தகுதி பெற்ற விமானி. அவரது இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தின்படி, மோனிகா பயணம் மற்றும் பேஷன் மீது அதிக நாட்டம் கொண்டவர்.

ஆபத்தான தருணத்தில் சிறப்பாக செயல்பட்ட “கேப்டன் மோனிகா கண்ணா மற்றும் முதல்நிலை அதிகாரி பல்பிரீத் சிங் பாட்டியா” ஆகியோரை பற்றி பெருமிதம்கொள்வதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.