திருமணத்துக்கு மணமகன் வரத் தாமதம்… மணமகள் எடுத்த அதிரடி முடிவு

317
Advertisement

முகூர்த்த நேரத்திற்குள் மணமகன் வராததால், மணமகள் எடுத்த அதிரடி முடிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

நம் நாட்டில் முகூர்த்த நேரத்தில் திருமணம் நடைபெறுவது வழக்கம். திருமணம் முடிந்தவுடன், மணமக்களை வாழ்த்த வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமன்றி, மணமக்களும் அறுசுவை உணவு உண்பதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால், அண்மையில் வடஇந்தியாவில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் ஊர்வலமாகச் சென்றதால், மணமகன் வரத் தாமதமானது. மணமகன் முகூர்த்த நேரத்துக்குள் வராததால், பொறுமையிழந்த மணமகள் விறுவிறுவென்று சாப்பாட்டுக்கூடத்துக்குள் சென்று விதம்விதமான அறுசுவை உணவுகளை ரசித்து சாப்பிடத் தொடங்கிவிட்டார். அதைப் பார்த்த விருந்தினர்களும் திருமண விருந்தை சாப்பிடத் தொடங்கினர்.

திருமணத்துக்கு முன்பே கல்யாண சாப்பாட்டை சாப்பிட்ட மணமகளின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி, நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.