கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு

184

தலைநகர் டெல்லியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, லஹோரி கேட் பகுதியின் வால்மீகி மந்திர் அருகே ஜிபி சாலையில் அமைந்திருந்த 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிப்பாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ள கூறப்படும் நிலையில், கட்டிடம் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.