ராகுல் காந்தி அவதூறு வழக்கில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அவரது மக்களவை தொகுதி எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்திக்கு எந்த இடைக்கால நிவாரணமும் கிடைக்கவில்லை. கடைசியாக சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்தகட்டமாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டிலும் பயனில்லை.
அதேசமயம் இந்த வழக்கில் ஜூன் மாதம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. தற்போதைக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இங்கு அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஒருவேளை அடுத்த பொதுத்தேர்தல் வருவதற்கு ஓராண்டிற்கும் குறைவான நாட்களே இருந்தே தேர்தல் ஆணையம் எப்படி வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம். தற்போதைய சூழலில் இடைத்தேர்தலுக்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை எனக் கூறப்பட்டது. தற்போது எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத சூழலில், வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.