சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

372

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 58 ஆயிரத்து 87 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 134 ஆக பதிவாகியுள்ள நிலையில், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 574 ஆக உள்ளது.

மேலும் ஒரே நாளில் 19 பேர் பலியானதால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 630 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பிற்கு தற்போது 17 ஆயிரத்து 883 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.