தினசரி பாதிப்பு குறைந்தது

256

இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 ஆயிரத்து 614  பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 92 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு மேலும் 20 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு தற்போது 15 ஆயிரத்து 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.