இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

238
corona
Advertisement

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 799 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றில் இருந்து மேலும் 26 ஆயிரத்து 718 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பால் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 458 ஆக உள்ளது.

தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 247 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 48 ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 90 கோடியே 79 லட்சத்து 32 ஆயிரத்து 861 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.