சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பெரும்பாலான நகரங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலக மக்களை கொரோனா தொற்று அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்காரணமாக சீனாவின் பெரும்பாலான நகரங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டத்தின் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு பெய்ஜிங்கில் நடைபெற இருப்பதை ஒட்டி, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் லாக்டவுன் நகரில் ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் பெருமளவிற்கு குறைக்கப்பட்டுள்ளன. பொது முடக்கம் காரணமாக சீனாவிற்கு சுற்றுலா வருவாய் பெருமளவில் குறைந்துவிட்டது.