இந்தியாவில் நேற்று 11ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 12ஆயிரத்து193 ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 48லட்சத்து 81ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவுக்காக 67ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,258-லிருந்து 5,31,300 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 10,780 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று 10,765 பேர் வீடு திரும்பியுள்ளனர்.